17 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்..மக்களுக்காக விளையாடுகிறோம்..கேப்டன் நெகிழ்ச்சி
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது குறித்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ரோவ்மன் பாவெல் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டி20 தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள்
புளோரிடாவில் நடந்த கடைசி டி20 போட்டியில், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை படைத்தது.
அதேபோல் 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியடையாமல் இருந்து வந்த இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட்டது.
Twitter (windiescricket)
கேப்டன் ரோவ்மன் பாவெல் நெகிழ்ச்சி
தொடரை வென்ற பின்னர் பேசிய மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ரோவ்மன் பாவெல், 'வார்த்தைகளால் கூறுவது கடினம். எங்கள் உணர்வுகளை கூற போதுமான சொற்கள் இல்லை. ஒரு நெடிய தொடரில் இந்திய அணியை தோற்கடித்துள்ளோம். நேற்று இரவு (4வது போட்டி அன்று) நாங்கள் மோசமாக தோற்கடிக்கப்பட்ட பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசினோம்.
எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம். பயிற்சி ஊழியர், சேர்மன் ஆகியோருக்கு இந்த பெருமை போய்சேரும்.
தனிநபர் செயல்படுகளில் நான் சிறப்பாக பெரிய ஆள், அது அணிக்கு உதவும் போது தான். சக்தி வாய்ந்த இந்திய அணியை கட்டுப்படுத்த முயற்சித்ததற்காக பந்துவீச்சாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் போய் சேரும். அவர்கள் (ரசிகர்கள்) நாங்கள் கீழே இறங்கியபோது எங்களை சுற்றி திரண்டு ஆதரவு அளித்தனர்.
சமூக ஊடகங்களிலும் ஆதரவு அளித்ததால், அது கரீபியன் முகங்களில் புன்னகையை வரவழைக்க கூடுதல் உந்துதலாக இருந்தது' என தெரிவித்தார்.
Twitter (windiescricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |