சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் பணியாளர்கள் பற்றாக்குறை: புலம்பெயர்ந்தோர் தேவை
சுவிட்சர்லாந்தில் பணியாளர் பற்றாக்குறை அதிகரித்துவரும் நிலையில், புலம்பெயர்ந்தோரை பணிக்கு எடுத்தாலொழிய நிலைமை முன்னேறப்போவதில்லை என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அதிகரித்துவரும் பணியாளர் பற்றாக்குறை
சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பல துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், எதிர்காலத்தில் பணியாளர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்கிறார் துறை சார் நிபுணரான Hendrik Budliger என்பவர்.
swissinfo
இந்த பற்றாக்குறையைத் தீர்க்கவேண்டுமானால், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்வோரை பணிக்கு எடுத்தேயாகவேண்டும் என்கிறார் Budliger.
2050இல் நிலைமை இன்னும் மோசமாகும்
இப்போதே இப்படி ஒரு நிலை இருக்குமானால், 2050இல் பணியாளர்கள் பற்றாக்குறை சுமார் 1.3 மில்லியனாக உயரும் என்கிறார் Budliger.
அவர் இந்த பிரச்சினையைத் தீர்க்க புலம்பெயர்தலை அதிகரிப்பதே ஒரே வழி என்று கூறிக்கொண்டிருக்க, சுவிஸ் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியோ, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிரேரணை ஒன்று குறித்து திட்டமிட்டு வருகிறது.
swissinfo