ஜிஎஸ்டி வரி விதிப்பால் Royal Enfield பைக்குகளின் விலை உயர போகிறது! என்னென்ன மொடல்?
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் அமலுக்கு வரவுள்ளதால் Royal Enfield நிறுவனத்தின் பைக்குகளின் விலை உயர போகிறது
350 சிசிக்கு அதிகமாக engine திறன் கொண்ட பைக்குகளுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
Royal Enfield பைக்கின் விலை
1. 6 விதமான வேரியன்ட்களில் வரும் Interceptor 650 தற்போது ரூ.3..09 லட்சம் முதல் ரூ.3.38 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.
இனி இந்த பைக்கின் விலையானது ரூ.3.32 லட்சம் முதல் ரூ.3.62 லட்சம் வரையில் உயருகிறது.
2. 5 விதமான வேரியன்ட்களில் வரும் Continental GT 650 தற்போது ரூ.3.25 லட்சம் முதல் ரூ.3.78 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இனி இந்த பைக்கின் விலையானது ரூ.3.49 லட்சம் முதல் ரூ.3.78 லட்சம் வரை உயரப்போகிறது.
3. 4 விதமான வேரியன்ட்களில் வரும் Classic 650 தற்போது ரூ.3.36 லட்சம் முதல் ரூ.3.49 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.
இனி இந்த பைக்கின் விலையானது ரூ.3.61 லட்சம் முதல் ரூ.3.75 லட்சம் வரை உயருகிறது.
4. 3 விதமான வேரியன்ட்களி்ல் வரும் Shotgun 650 தற்போது ரூ.3.78 லட்சம் முதல் ரூ.3.81 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.
இனி இந்த பைக்கின் விலையானது ரூ.4.05 லட்சம் முதல் ரூ.4.08 லட்சம் வரை உயருகிறது.
5. 5 விதமான வேரியன்ட்களில் வரும் super meteor 650 தற்போது ரூ.3.71 லட்சம் முதல் ரூ.4.02 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது
இனி இந்த பைக்கின் விலையானது ரூ.3.98 லட்சம் முதல் ரூ.4.32 லட்சம் வரை உயருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |