Royal Enfield: புதிய ‘புல்லட் 350' மாடல் அறிமுகம்! விலை தெரியுமா?
வாகன விற்பனையில் தனக்கென்று இடத்தை பிடித்துள்ள ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிய ‘புல்லட் 350' மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்பீல்ட் புல்லட்
வாகனத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடியது புல்லட் தான். இதனுடைய கம்பீர தோற்றம் மற்றும் சத்தம் ஆகியவை கௌரவமாக பார்க்கப்படுகிறது.
1932 ஆம் ஆண்டு ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புல்லட் வகை பைக்கை அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்து, வாகன விற்பனையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனக்குரிய இடத்தை பிடித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
பின்னர், 2010 ஆம் ஆண்டு யுசி என்று அழைக்கப்படும் யூனிட் கன்ஸ்ட்ரக்சன் வகை புல்லட் பைகளை அறிமுகம் செய்தது.
இதனைத்தொடர்ந்து, வடிவமைப்பு, சத்தம், தோற்றம் ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்தவகையில், வாகனத்தில் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
புல்லட் 350
தற்போது, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 'புல்லட் 350' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுக்கு மேலாக புல்லட்டில் யுசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த 'புல்லட் 350' மாடலில் ஜே சீரிஸ் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய புல்லட், 350 மிலிட்டரி, ஸ்டாண்டர்ட், பிளாக் கோல்ட் ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதன் விலையானது 1.73 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தோற்றமும், பொலிவும் கொண்ட இந்த பைக்கை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |