பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்... அரச குடும்பம் எடுத்துள்ள முடிவு: பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அரண்மனை முடிவு
தேர்தல் பரப்புரைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவது அல்லது திசை திருப்புவது போல் தோன்றலாம் என்ற காரணத்தாலையே அரண்மனை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்ய பிரித்தானியா எதிர்வரும் ஜூலை 4ம் திகதி தேர்தலுக்குச் செல்வதாக பிரதமர் ரிஷி சுனக் இன்று மதியம் அறிவித்தார். முன்னதாக இன்று காலை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை சந்தித்துள்ள பிரதமர் ரிஷி சுனக் பாராளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த முடிவால் எவரேனும் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், மன்னர் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |