மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நிலை சரிவு: பால்மோரலில் கூடும் நெருங்கிய அரச குடும்பத்தினர்
மருத்துவரின் மேற்பார்வையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்.
பால்மோரலில் குவிந்து வரும் நெருங்கிய அரச குடும்ப உறுப்பினர்கள்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அக்கறை தெரிவித்ததை தொடர்ந்து, அரச குடும்ப உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) உடல்நிலை குறித்து அவரது மருத்துவர்கள் கவலைத் தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் ராணி இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்து இருந்தது.
Sky News
அதுமட்டுமின்றி இது தொடர்பாக இன்று காலை வெளியான அறிக்கையில், ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், அத்துடன் ராணியை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதற்கு பரிந்துரைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறித்து அறிய வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் டச்சஸ் ஆஃப் கார்ன்வால் கமீலா ஆகியோர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலுக்கு பயணம் செய்வதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.
PA MEDIA
இவர்களுடன் கேம்பிரிட்ஜ் பிரபு இளவரசர் வில்லியமும் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யார்க் பிரபு இளவரசர் ஆண்ட்ரூ-வும் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையை நோக்கி செல்வதாகவும், அவர் அங்கு இளவரசர் சார்லஸ், கமீலா மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோருடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய மகாராணியின் உடல்நிலையில் சரிவு: ட்விட்டரில் வருத்தம் தெரிவித்த பிரதமர் லிஸ் ட்ரஸ்!
Sky News
அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் ராணியின் உடல்நிலை தொடர்பாக கூடுவது மக்களின் கவலைகளை அதிகரிக்கும் என்று அரச நிருபர் ரியானான் மில்ஸ் தெரிவித்துள்ளார்.
இத்துடன் தற்போது சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் ஆகிய ஹாரி மற்றும் மேகன் ஸ்காட்லாந்துக்கு பயணம் செய்வார்கள் என்று அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.