நாளை இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு திருமண நாள்: புறக்கணிக்க ராஜ குடும்பம் திட்டம்?
பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர், நாளை தங்கள் ஏழாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாட இருக்கிறார்கள். இந்நிலையில், ராஜ குடும்ப உறுப்பினர்கள், தம்பதியரின் திருமண நாளை புறக்கணிக்கக்கூடும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு திருமண நாள்
பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர், நாளை, அதாவது, மே மாதம் 19ஆம் திகதி, தங்கள் ஏழாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாட உள்ள நிலையில், மக்கள் கவனமெல்லாம், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்களா அல்லது புறக்கணிப்பார்களா என்பதன் மேலேயே உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக ராஜ குடும்பத்தினர் இளவரசர் ஹரியின் குடும்பத்துடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள், இம்மாதம் 6ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடிய ஹரியின் மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு வாழ்த்துக் கூறவும் இல்லை, 8 ஆம் திகதி லண்டன் வந்த இளவரசர் ஹரியின் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டி விழாவில் கலந்துகொள்ளவும் இல்லை.
பொதுவாக ராஜ குடும்பத்தினர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் திருமண நாள் போன்ற விசேட தினங்களில் வாழ்த்துச் செய்திகள் தெரிவிப்பதுண்டு. இம்முறை அவர்கள் ஹரி மேகன் தம்பதியருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை என்றால், குடும்பத்தில் பிளவு நீடிப்பதையே அது காட்டுவதாக அமையும். ஆனால், அவர்கள் வாழ்த்துக் கூறுவார்களானால், ஹரி மேகன் தம்பதியர் ராஜ குடும்பத்துடன் இணைய அழைப்பு விடுக்கும் விடயமாக அதை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Grant Harrold.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |