மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு முத்தம் கொடுத்த ரசிகப்பெண்கள்! வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்
ராணி இரண்டாம் எலிசபெத்தின் (செப்டம்பர் 8) மரணத்தைத் தொடர்ந்து அவரது மகனான சார்லஸ் பிரித்தானியாவின் மன்னரானார்.
புதிய மன்னரை வாழ்த்த ஆயிரக்கணக்கானோர் கூடினர், அவர் முடிந்தவரை கைகுலுக்க முயற்சி செய்தார்.
அவர் மன்னராக அறிவிக்கப்பட்ட பிறகு ராயல் குடும்பத்தின் ரசிகர்ககளான இரண்டு பெண்கள் அவருக்கு கன்னத்திலும் கையிலும் முத்தம் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திறங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபயணத்தின் போது நலம் விரும்பிகளால் வரவேற்கப்பட்டார்.
அப்போது, ஜனனி அசிமினியோஸ் என்ற பெண் மன்னருடன் கைக்குலுக்கிய பிறகு உணர்ச்சிவசப்பட்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. முத்தமிட்ட அப்பெண்ணும் பிரபலமானார்.
"நான் அவருக்கு கைகுலுக்க மட்டுமே திட்டமிட்டிருந்தேன், ஆனால் அவர் என் கையை எடுத்தவுடன், நான் அவருக்கு ஒரு முத்தம் கொடுக்கலாமா என்று கேட்பேன் என்று நினைத்தேன் என்று கூறினேன். அவர் கவலைப்படவில்லை என்று கூறினார், நான் அவரது கன்னத்தில் முத்தமிட்டேன்.
'அவர் அதை அழகாக ஏற்றுக்கொண்டார், சிரித்தார், நான் அவருடைய கண்களைப் பார்த்தேன், அவர் அதை நன்றாக உணர்ந்திருப்பார் என்று எனக்குத் தெரியும்' என்று அப்பெண் கூறியுள்ளார்.
மேலும் மற்றோரு பெண், மன்னர் மூன்றாம் சார்லஸ் மக்கள் கூட்டத்தின் வழியாகச் செல்லும் போது, மன்னர் நீட்டிய கையை முத்தமிட்டாள். அந்த புகைப்படமும் வைரலானது.
மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தவும், புதிய மன்னரைப் பார்க்கவும் ஆயிரக்கணக்கான நலம் விரும்பிகள் மற்றும் துக்கம் அனுசரிக்க வந்தவர்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே கூடினர்.
அவரைச் சந்திக்க தெருக்களில் வரிசையாக நின்ற நலம் விரும்பிகள் சார்லஸுக்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.
புதிய மன்னரை வாழ்த்த ஆயிரக்கணக்கானோர் கூடினர், அவர் முடிந்தவரை கைகுலுக்க முயற்சி செய்தார்.