மன்னர் சார்லஸின் பிறந்தநாள் அணிவகுப்பில் காதலை பரிமாறிக்கொண்ட ஜோடிகள் - வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில், காதல் ஜோடியின் ஓர் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
லண்டனில் நிகழும் அணிவகுப்பு
இங்கிலாந்து மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
ட்ரூப்பிங் தி கலர் எனப்படும் இவ்விழாவில், அரண்மனை மாடியின் முன் பக்கத்தில் (Balcony) ராஜ குடும்பத்தினர் நிற்பார்கள். அதன் போது ராணுவ வீரர்கள் அணுவகுப்பை மேற்கொள்வார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.
அந்தவகையில் ஒரு காதல் ஜோடி செய்த செயலும் தற்போது வீடியோவாக வைரலாகி வருகின்றது.
காதலை பரிமாறிக்கொண்ட ஜோடிகள்
அரண்மனையில் முதல் வாசலில் இராணுவ அணிவகுப்பிற்கு காவலர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு பெண் தனது காதலை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
Moments before the Royal Family appeared on the balcony of Buckingham Palace, a guardsman had a very special question ??♂️?#troopingthecolour #katemiddleton #royalfamily #buckinghampalace #proposal #royaltok #love pic.twitter.com/cIG9XTExsi
— Daily Mail Online (@MailOnline) June 15, 2024
அப்போது ஒரு மோதிரத்தையும் அப்பெண்ணிற்கு அணிவித்து அனுப்பியுள்ளார். உடனே காதலி மீண்டும் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.
கடமைக்கு இடையே காதலில் நெகிழ்ந்த இந்த ஜோடியின் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |