ஆபத்தான STRATUS ஏவுகணைகளுடன்... ரஷ்ய நீர்மூழ்கிகளை வேட்டையாடும் பிரித்தானியக் கடற்படை
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் ராயல் கடற்படை கப்பல்களில், சப்சோனிக் STRATUS ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் அச்சுறுத்தல்
ராயல் கடற்படையின் புதிய வகை 26 போர்க்கப்பல் பேரழிவு தரும் ஏவுகணைகளுடன் களமிறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

STRATUS ஏவுகணைகள் சப்சோனிக் வகை, குறைந்த-கண்காணிக்கக்கூடிய குரூஸ்-ஸ்டிரைக் ஆயுதமாகும், இது நிலம் அல்லது கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடினின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சியில், பிரித்தானியாவின் இந்த வகை 26 போர்க்கப்பல் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து இடையேயான கடல்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து கடல் எல்லைக்குள் நுழையும் ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் குறிப்பிடத்தக்க மோசமான மோதல் ஒன்று நிகழ்ந்தது,
ரஷ்ய உளவு கப்பலான யந்தர், ஸ்காட்லாந்தின் வடக்கே காணப்பட்டபோது RAF விமானிகள் மீது லேசர் கதிர்களைப் பிரகாசித்தது, இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி, தொடர்புடைய ரஷ்ய கப்பல் இங்கிலாந்தின் தெற்கே பயணித்தால் பதிலடி உறுதி என்ற எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டது.

பாதுகாப்பைப் பலப்படுத்த
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் சமாதான ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் வெளிப்படையாக நிராகரித்ததைத் தொடர்ந்து பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
தேவை ஏற்பட்டால் நேட்டோவுடன் போருக்குச் செல்லவும் ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் அச்சுறுத்தினார். இந்த நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், உலகளாவிய நிலையற்ற தன்மை மிகுந்த இந்த நேரத்தில், நமது கடல் பகுதியில் அதிகமான ரஷ்ய கப்பல்கள் கண்டறியப்படுவதால், நமது தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

மேலும், நோர்வேயுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், நமது எல்லைகளையும், நமது நாடுகள் சார்ந்திருக்கும் முக்கியமான உள்கட்டமைப்பையும் பாதுகாக்கும் நமது திறனை வலுப்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கிலாந்தும் நோர்வேயும் நேட்டோவின் வடக்குப் பகுதியில் தோளோடு தோள் நின்று, ஐரோப்பாவைப் பாதுகாத்து, நமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |