உங்கள் கணக்கில் ரூ.1 கோடி இருந்தால்... 10, 20, 30 ஆண்டுகளில் அதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?
ஒரு பெரிய தொகையுடன் ஓய்வு பெறுவது இன்று ஒரு திடமான திட்டமாக இருக்கலாம்.
வீடு வாங்குவது, குழந்தையின் கல்விக்கு நிதியளிப்பது அல்லது திருமணச் செலவுகளை ஈடுகட்டுவது போன்ற பல்வேறு நிதி இலக்கை பெற இவ்வாறு பணம் சம்பாதித்து வருவது வழக்கம்.
இருப்பினும், நீங்கள் 10, 20 அல்லது 30 ஆண்டுகளில் ஓய்வு பெற்றால் இந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்பதைக் கருத்திக்கொள்ள வேண்டும்.
பணவீக்கம், காலப்போக்கில் படிப்படியாக விலை அதிகரிப்பு, பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. எதிர்காலத்தில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்று ஒரு பெரிய தொகை போதுமானதாக இருக்காது.
உதாரணமாக, ரூ.1 கோடி என்பது இப்போது பெரிய தொகைாயக இருந்தாலும், பணவீக்கத்தால் அதன் மதிப்பு காலப்போக்கில் குறையும்.
இன்றைக்கு ஒரு காரின் விலை 10 லட்சம் என்றால், 15 ஆண்டுகளில் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். அந்தவகையில் 10, 20, 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ரூ.1 கோடியின் மதிப்பு 10 ஆண்டுகளில் எவ்வளவாக இருக்கும்?
சராசரி பணவீக்க விகிதம் 6% என்று வைத்துக் கொண்டால், ரூ.1 கோடி மதிப்பு காலப்போக்கில் கணிசமாக சுருங்கிவிடும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.55.84 லட்சமாக இருக்கும்.
20 ஆண்டுகளில், இது சுமார் 31.18 லட்சமாக குறையும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு சுமார் 17.41 லட்சமாக குறையும் என்று கூறப்படுகிறது.
பலர் தற்போதைய வாங்கும் சக்தியின் அடிப்படையில் தங்கள் நிதிகளைத் திட்டமிடுகிறார்கள், ஆனால் பணவீக்கம் காலப்போக்கில் இதை படிப்படியாகக் குறைக்கிறது.
ஒரு முதலீடு 6% வருமானத்தை வழங்கினாலும், அது பணவீக்கத்துடன் மட்டுமே வேகத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
எனவே, எதிர்காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உங்களின் ஓய்வூதிய சேமிப்பில் பணவீக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |