சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி சொத்துகள் முடக்கம்
சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கை
சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஆண்டாள் ஆறுமுகத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஜெயிலுக்கு செல்வதற்காக வேண்டுமென்றே குற்றம் செய்யும் 81 வயது மூதாட்டி.., பின்னணியில் இருக்கும் காரணம்
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் எக்ஸ் பதிவில், "சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை செய்தது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் இருக்கும் தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
இந்த சோதனையின் முடிவில் அவரது ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |