ராமர் கோவில் திறப்பு விழா: 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு
நீங்கள் இன்னும் 2000 ரூபாய் நோட்டை மாற்றவில்லை என்றால், அதை மாற்றப் போகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஒற்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்
ஜனவரி 22-ஆம் திகதி அன்று...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும், டெபாசிட் செய்யயும் வசதி வரும் 22ம் திகதி அன்று இருக்காது என இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தெரிவித்துள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் திறக்கும் தினமான 22ம் திகதி (திங்கட்கிழமை), பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை என்று மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசு அறிவித்த அரை நாள் விடுமுறையின் காரணமாக, ஜனவரி 22, திங்கட்கிழமை இந்திய ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்/டெபாசிட் செய்யும் வசதி இருக்காது" மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வசதி ஜனவரி 23 செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.
கடந்த ஆண்டு மே 19-ம் திகதி ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இதற்காக வாடிக்கையாளர்களுக்கு இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ செப்டம்பர் 30-ம் திகதி வரை வசதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 31ம் திகதி வரை ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துன.
தற்போது ரூ.42,000 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |