இந்த ஒற்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி உட்பட ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஏராளமான கார்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் பல பணக்கார தொழிலதிபர்களின் தாயகமாக இந்தியா உள்ளது.
ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் இந்தியர் அல்ல.
உலகின் மிக விலையுயர்ந்த தனியார் விமானத்தின் உரிமையாளர் வேறு யாருமல்ல, சவூதி அரேபிய இளவரசரும் தொழிலதிபருமான அல் வலீத் பின் தலால் அல் சௌத் (Saudi prince Alwaleed bin Talal al-Saud) ஆவார்.
அவர் ஒரு முக்கிய மத்திய கிழக்கு அரச குடும்பத்தின் உறுப்பினராகவும், பெரும் செல்வத்தை உடையவராகவும் உள்ளார்.
ரூ. 16,000 கோடிக்கு Private Jet
சவூதி இளவரசர் அல்வலீத் பின் தலால் அல்-சவுத் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, இது 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை பண மதிப்பில் ரூ. 16,000 கோடிக்கு மேல் இருக்கும்.
இதை ஒப்பிடும்போது, அம்பானி மற்றும் டாடா இருவரும் வைத்திருக்கும் தனியார் ஜெட் விமானங்களின் மதிப்பு மிகவும் குறைவானதாகவே உள்ளன.
இளவரசர் அல்வலீத் பின் தலால் அல்-சவுத் Boeing 747 தனியார் விமானத்தை வைத்திருக்கிறார், இது பொதுவாக 150 முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்புடையதாக உள்ளது.
ஆனால், விரிவான மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக, இளவரசரின் தனியார் விமானத்தின் மொத்த விலை சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இந்த விமானத்தில் 800 விருந்தினர்கள் வரை தங்கலாம் மற்றும் 10-seat dining hall, opulent master suite, prayer room, home theatre system, spa மற்றும் sauna ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சவூதி இளவரசரின் சொத்து மதிப்பு
அல் வலீத் பின் தலால் அல் சவுதின் மொத்த சொத்து மதிப்பு 18.7 billion USD, இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் கோடி என Forbes மதிப்பிட்டுள்ளது.
இந்திய கோடீஸ்வரரான Mukesh Ambaniக்கு சொந்தமான Boeing Business Jet 2 விமானத்தின் மதிப்பு ரூ.603 கோடி என கூறப்படுகிறது.
அதானி குழுமத்தின் Gautam Adaniயிடம் Hawker Beechcraft 850XP, Embraer Legacy 650, and Bombardier Challenger 605 மொடல்கள் உட்பட பல தனியார் விமானங்களும் உள்ளன.
இதற்கிடையில், டாடா குழுமத்தின் Ratan Tata மிகவும் விலையுயர்ந்த தனியார் ஜெட் மாடல்களில் ஒன்றான Dassault Falcon 2000 விமானத்தைக் கொண்டுள்ளது, அதன் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.
Elon Musk, Bill Gates மற்றும் Jeff Bezos போன்ற மற்ற பில்லியனர்களும் தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet