கடவுளுக்கும் உதவித்தொகை வழங்க சொன்ன முதலமைச்சர்.., பேசுபொருளான மாநிலம்
இந்திய மாநிலம், கர்நாடகாவில் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு உதவித்தொகை
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதியாக ‘குருஹ லட்சுமி திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என கூறியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த தொடங்கியது. 1.2 கோடி பெண்கள் பயன்பெறும் இந்த திட்டத்திற்காக மாதம் ரூ.2,000 கோடி செலவிடப்படுகிறது.
அம்மனுக்கும் உதவித்தொகை
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு துணைத் தலைவருமான தினேஷ் கூலிகவுடா, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவகுமாருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் அவர், மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனையும் குருஹ லட்சுமி திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும், அவருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இக்கடிதத்தை ஏற்ற துணை முதலமைச்சர் சாமுண்டீஸ்வரி அம்மனையும் இந்த திட்டத்தில் பயனாளராக சேர்த்துள்ளார். இதனால், மாதந்தோறும் ரூ.2000 அம்மனும் பெறுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |