ரூ9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பி வரவில்லை: ரிசர்வ் வங்கி
ரூ9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடமிருந்து திரும்பி வரவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.26 சதவீத நோட்டுகள் திரும்பிவிட்டதாகவும், சுமார் ரூ. 9,760 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
மே 19 அன்று, ரிசர்வ் வங்கி ரூ2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 3.56 லட்சம் கோடியாக இருந்தது. நவம்பர் 30, 2023 அன்று வணிகம் முடிவில் ரூ 9,760 கோடியாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் கரன்சி நோட்டுகளில் 97.26 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம்.
மேலும், மக்கள் இந்திய அஞ்சல் மூலம் எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி, இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
ஒரே நாளில் ரூ.54,000 கோடி சொத்து அதிகரிப்பு., உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டாப்-20க்குள் நுழைந்த அதானி
அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்களும் நிறுவனங்களும் முதலில் செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவோ கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் காலக்கெடு அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. வங்கிக் கிளைகளில் டெபாசிட் மற்றும் பரிமாற்றச் சேவைகள் இரண்டும் அக்டோபர் 7-ஆம் திகதி நிறுத்தப்பட்டன.
அக்டோபர் 8 முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில், தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கலாம்.
அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வங்கி நோட்டுகளை மாற்றலாம் . .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2000 Rupees banknotes, 19 RBI offices, Rs 2000 notes, Rs 9,760 crore, Reserve Bank of India, 2000 Rupees notes