கிராமவாசிக்கு பரிசாக கிடைக்கும் ரூ.86 லட்சம்.., சரியான நேரத்தில் சொன்ன ரகசிய தகவல்
கிராமவாசி ஒருவர் சரியான நேரத்தில் ரகசிய தகவல் அளித்ததால் அவருக்கு ரூ.86 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
ரூ.86 லட்சம் பரிசுத்தொகை
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கட்சிரோலி பகுதியில் கடந்த 17 -ம் திகதி மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த தேடப்படும் 12 மாவோயிஸ்ட்டுகளை கமாண்டோக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட கமாண்டோ பிரிவினருக்கு ரூ.51 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கொடுத்த ரகசிய தகவல் அடிப்படையில் கமாண்டோக்கள் விரைந்து செயல்பட்டு 12 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக்கொன்றனர்.
இந்த ரகசிய தகவலை அளித்த கிராமவாசியின் விவரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் சொல்ல இயலாது. அவருக்கு விரைவில் ரூ.86 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |