தென்னாப்பிரிக்கா அணியை பந்தாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி: 0-3 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்
Thiru
in கிரிக்கெட்Report this article
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஹென்ட்ரிக்ஸ்(42), மார்க்கரம்(41), டோனோவன் ஃபெரேரா(48) ஓட்டங்களை குவித்தனர்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை குவித்தது.
தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
இந்நிலையில் 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் (91) ஜோஷ் இங்கிலிஸ் (42) ஓட்டங்களை குவித்தனர். இறுதியில் 17.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அவுஸ்திரேலிய அணி 191 ஓட்டங்களை குவித்தது.
இதன்மூலம் 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி தொடரையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்த டி20 தொடரின் தொடர் நாயகனாக அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |