குட்டி நாடொன்றை அமெரிக்காவின் அச்சுறுத்தல் என கூறிய வெளிவிவகாரச் செயலாளர்
குட்டி நாடான கியூபாவை வல்லரசு நாடான அமெரிக்கா, தங்கள் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் என வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
உரிமையும் கடமையும்
1996-ஆம் ஆண்டில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்கக் குடிமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா கொலைக் குற்றம் சாட்டியுள்ளதன் அடுத்த நாள் மார்கோ ரூபியோவின் கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் விருப்பம் என்பது பேச்சுவார்த்தை ஊடானத் தீர்வுதான் என்று கூறியுள்ள ரூபியோ, ஆனால் எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் தனது நாட்டைப் பாதுகாக்கும் உரிமையும் கடமையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு உண்டு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால், கியூபா எபோதும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்ற நிலையை எட்டவில்லை என்றும், ரூபியோ பொய் சொல்கிறார் என கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக்கிரமிப்பைத் தூண்ட
பதிலுக்கு, இப்பிராந்தியம் முழுவதிலும் பயங்கரவாதத்திற்கு முக்கிய ஆதரவளிக்கும் நாடுகளில் ஒன்றாக கியூபா திகழ்வதாக ரூபியோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பைத் தூண்ட முயன்றதற்காக ரூபியோவை விமர்சித்ததுடன், அமெரிக்க அரசாங்கம் கியூபாவை ஈவிரக்கமின்றியும் திட்டமிட்டும் தாக்கி வருவதாக கியூப வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அதிரடி எண்ணெய் முற்றுகையால் மோசமடைந்த எரிபொருள் நெருக்கடியால் கியூபா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு உடன்பாட்டை எட்டுமாறு ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அது அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதனால், கடந்த சில மாதங்களாக கியூபாவின் குடிமக்கள் நீடித்த மின்வெட்டையும் உணவுப் பற்றாக்குறையையும் சந்தித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |