ஈரான் போரின் தாக்கம்: ரூபாய் வரலாறு காணாத சரிவு, பங்குச்சந்தையில் 7 லட்சம் கோடி இழப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சரிந்துள்ளது.
ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ.94.29 என பதிவானது.
இந்த திடீர் சரிவு காரணமாக, பங்குச்சந்தையில் வெறும் ஒரு மணி நேரத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், சந்தையில் விற்பனை அதிகரித்தது.

நிபுணர்கள் கூறுவதாவது, “ஈரான் போரின் தாக்கம் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவுகள் அதிகரித்து, ரூபாய் மதிப்பு சரிவுக்கு உள்ளானது. பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெற்றதால், சந்தை வீழ்ச்சி ஏற்பட்டது” என தெரிவித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை (Sensex) மற்றும் தேசிய பங்குச்சந்தை (Nifty) இரண்டும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், விமான சேவைகள் உள்ளிட்ட துறைகள் அதிக பாதிப்புக்குள்ளாயின.
மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிலைமையை கவனித்து வருகின்றன. “ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என RBI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை, இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |