முக்கிய வான்படை தளபதியை இழந்துள்ள ரஷ்யா: உக்ரைன் ராணுவம் அதிரடி
உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலை எதிர்த்து அந்தநாட்டு ராணுவம் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் ரஷ்யாவின் 331st வான்வழி படைப்பிரிவின் தளபதியான கர்னல் செர்ஜி சுகரேவ் உயிரிழந்துள்ளார்.
உக்ரைனின் மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்களை பாதுகாக்க போவதாகவும் தெரிவித்து உக்ரைனின் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா தனது போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீதான ரஷ்ய போர் இன்று 23வது நாளாக நடந்து வருகிறது.
ரஷ்ய படைகளின் 23 நாள்களாக தொடரும் இந்த போரில் உக்ரைனின் ராணுவத்தின் எதிர்ப்பு தாக்குதலால் இன்னமும் அந்த நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் தொடர்ந்து திணறி வருகின்றனர்.
Confirmed: Colonel Sergey Sukharev, Russia’s 331st Airborne Regiment commander, has been eliminated in Ukraine.
— KyivPost (@KyivPost) March 18, 2022
He was directly responsible for the Ilovaisk massacre of 2014. pic.twitter.com/8RoSC4dR5j
இந்தநிலையில், உக்ரைனின் மீது வான் தாக்குதலை தலைமை தாங்கி நடத்திவரும் 331st ரஷ்ய வான்வழி படைப்பிரிவின் தளபதி கர்னல் செர்ஜி சுகரேவ்வை உக்ரைன் ராணுவம் கொலை செய்துள்ளது.
இவர் கடந்த 2014ல் இலோவைஸ்க்(Ilovaisk) நடத்தப்பட்ட படுகொலைக்கு நேரடி பொறுப்பாளர் ஆவார்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இதுவரை பல தளபதிகளை இழந்துள்ள நிலையில், ரஷ்யாவின் மிக திறமையான வான்வழி படைப்பிரிவின் தளபதி கர்னல் செர்ஜி சுகரேவ்வை இழந்து இருப்பது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.