பேச்சுவார்த்தையை தொடர ரஷ்யா தயார்: அமைச்சர் அளித்த நம்பிக்கை வாக்குறுதி
அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேலும் தொடர, ரஷ்யா விரும்புவதாக அந்த நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சுமார் 1,30,000 படை துருப்புகளை உக்ரைன் எல்லையில் குவித்ததை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்து, உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியது.
பல கட்டங்களில் உலக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், ரஷ்யா தனது படை துருப்புகளை உக்ரைன் எல்லையில் இருந்து பின்வாங்காத நிலையில், இன்னும் சில தினங்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
ICYMI: Putin agreed to continue diplomatic talks with the U.S. and NATO over the situation in Ukraine following a meeting with Foreign Minister Sergey Lavrov https://t.co/AOBSfFRbeg pic.twitter.com/jPK2PjqZCB
— Bloomberg Quicktake (@Quicktake) February 15, 2022
இந்த நிலையில் நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை அந்த நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்விளைவாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடர் விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், ரஷ்யாவின் முக்கிய வேண்டுகோளை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் அமெரிக்காவின் ஏவுகணை கட்டுப்பாடு போன்ற வரவேற்கத்தக்க நகர்வுகளை மேற்கொண்டுள்ளதால் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகளை தொடர விரும்புவதாக தெரிவித்தார்.
ரஷ்ய படைகளின் ராணுவ பயிற்சி நிறைவு பெற்றதும் படைகள் அனைத்தும் பழைய நிலைகளுக்கு தீரும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷாயிகு வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் ராணுவ பயிற்சி சிலஇடங்களில் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் படைகளை திரும்ப பெறுவதற்கான எந்த ஒரு அறிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது