இலங்கைக்கு நன்கொடை.. ரசல் அர்னால்டு பாராட்டு
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 2 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்ததற்கு முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரசல் அர்னால்டு தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2 மில்லியன் டொலர்களை சுகாதாரத் துறைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் வழங்குவது மிகவும் அருமையான விடயம் என்றும், வாரியத்திற்கு தனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
Awesome @OfficialSLC Donating $2million to the health sector ???????
— Russel Arnold (@RusselArnold69) May 25, 2022
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், சுகாதாரத்திற்காக 2 மில்லியன் டொலர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அளிக்க உள்ள விடயம் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதற்காகவும், குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு இந்த நன்கொடை உதவும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Web