கடைசி போட்டியில் ருத்ரதாண்டவமாடிய ரஸல்! பறந்த சிக்ஸர்கள் (வீடியோ)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆந்த்ரே ரஸல்
ஜமைக்காவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது.
One Final Show from Dre Russ 🚀
— FanCode (@FanCode) July 23, 2025
A fitting last international innings from the West Indies all-rounder, showcasing the explosive talent that will be dearly missed by cricket fans everywhere 🥹#WIvsAus #AndreRussell pic.twitter.com/net68B3Woc
ஹோப் (9), ஹெட்மையர் (14), சேஸ் (12) ஆகியோர் சொதப்ப, வாணவேடிக்கை காட்டிய பிரண்டன் கிங் அரைசதம் விளாசினார்.
அவர் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் குவித்து வெளியேற, ஆந்த்ரே ரஸல் களமிறங்கிய சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
தனது கடைசி டி20 போட்டியில் ஆடிய அவர், 15 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் விளாச, மோட்டி 9 பந்துகளில் 18 ஓட்டங்கள் விளாசினார்.
அவுஸ்திரேலிய அணி வெற்றி
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 172 ஓட்டங்கள் குவித்தது. ஜம்பா 3 விக்கெட்டுகளும், எல்லிஸ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 15.2 ஓவரில் 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜோஷ் இங்கிலிஷ் (Josh Inglis) 33 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்களும், கேமரூன் கிரீன் (Cameron Green) 32 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்களும் விளாசினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |