அணு ஆயுத ஏவுகணையை கையில் எடுத்த ரஷ்யா: உக்ரைன் மீது நடத்தப்பட்ட சோதனை தாக்குதல்
அணுஆயுதங்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் ஒரேஷ்னிக் ஏவுகணைகள் குறித்த முக்கிய தகவலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ஒரேஷ்னிக் ஏவுகணைகள்
அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரி இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்க கூடிய ஒரேஷ்னிக் ஏவுகணைகள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரேஷ்னிக் ஏவுகணைகளை ரஷ்யா, தனது ஆதரவு நாடான பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ள நிலையில், இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் மத்தியில் சிறிய விழா ஒன்று நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒரேஷ்னிக் ஏவுகணைகள் இந்த மாத தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போரின் முன்கள வரிசையில் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரேஷ்னிக் ஏவுகணைகளின் திறனை புடின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதமே ஒரேஷ்னிக் ஏவுகணைகள் கொண்டு உக்ரைன் மீது சோதனை முயற்சியாக நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலானது, சோவியத் ரஷ்யா காலத்தில் கட்டப்பட்ட டினிப்ரோவில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணைகளை இடைமறிப்பது மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரேஷ்னிக் ஏவுகணைகள் தொடர்பான அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |