டெலிகிராம் நிறுவனரை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்த ரஷ்யா
கைது செய்ய பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து, டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை ரஷ்யா பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.
டெலிகிராம் நிறுவனர்
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் தலைவரான பாவெல் துரோவ் துபாயில் வசித்து வருகிறார். ரஷ்யாவில் பிறந்த துரோவ் பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியது.
அத்துடன் ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.
பயங்கரவாதிகள் பட்டியல்
இந்த நிலையில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ரோஸ்ஃபின்மானிட்டரிங், வியாழக்கிழமை அன்று பாவெல் துரோவை (Pavel Durov) தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
இதற்கிடையில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பாவெல் துரோவின் டெலிகிராம் ரஷ்யாவிற்குள் நாசவேலைகள், இணையவழி மோசடி மற்றும் ஆயுதத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க, உக்ரேனிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்படும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |