பெட்ரோல் தட்டுப்பாட்டிற்கு காரணம் இதுதான்: ஒப்புக்கொண்ட ரஷ்யா
ட்ரோன் தாக்குதல்களே பெட்ரோல் தட்டுப்பாட்டிற்கு காரணம் என ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
உற்பத்தி குறைப்பு
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விநியோகப் பாதைகள் மீது உக்ரைன் தாக்குதல்களை வசந்த காலத்தில் தீவிரப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பெட்ரோல் உற்பத்தியில் கணிசமான பங்கைக் கொண்ட நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரீமியா மற்றும் தெற்கு ரஷ்யாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் தட்டுப்பாட்டிற்கான காரணத்தை எரிசக்தி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்களே
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்தி வரும் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களே காரணம் என கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "சமீப காலமாக, எரிபொருள் மற்றும் எரிசக்தித் துறை நிறுவனங்கள் மீதான எதிரியின் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன; இதனால் பல தெற்குப் பிராந்தியங்களில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |