உக்ரைனை குறிவைத்த 260 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள்: இரவில் நடந்த வான்வழி மோதல்
Russia Aerial Assault on Ukraine: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
ரஷ்ய படைகள் இரவோடு இரவாக 260 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைனின் தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்ட 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 ஒனிக்ஸ் ஏவுகணை, 3S-8000 பண்ட்ரோல் ஏவுகணைகள் மற்றும் 222 ஆளில்லா விமானங்கள் ஆகியவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான தாக்குதல்கள் இடை மறிக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், இதில் இருந்து தப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் 15 வெவ்வேறு இடங்களில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் உக்ரைனிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட வான்வழி ஆயுதங்கள் 11 இடங்களில் கீழே விழுந்தது சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிலிருந்து 2 Onyx கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும், ரஷ்யாவின் பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்து Iskander-M/KN-23 பாலிஸ்டிக் ஏவுகணையும் ஏவப்பட்டுள்ளது.
அத்துடன் மில்லெரோவோ, ஓரெல், பிரிமோர்ஸ்கோ, அக்தார்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்தும் 258 வகையான பல்வேறு ட்ரோன்கள் உக்ரைன் நோக்கி ஏவப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |