British Council கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடம் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணியளவில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதல் நிகழ்த்தியது.
(வீடியோவைக் காண https://www.youtube.com/watch?v=DdrIHlBIpYg)
ரஷ்யா, 598 ட்ரோன்கள், 31 க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கீவ் மீது தாக்குதல் நடத்தியதாக கீவ் நகர நிர்வாகத் தலைவரான Tymur Tkachenko தெரிவித்துள்ளார்.
அவை, சிற்றி சென்றரிலுள்ள ஒரு ஷாப்பிங் மால் உட்பட சுமார் 100 கட்டிடங்களைத் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த தாக்குதலில் ஐரோப்பிய யூனியன் அலுவலகம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையரான Marta Kos, ரஷ்ய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடம் மீது தாக்குதல்
Last night, the bombing in Kyiv damaged the British Council offices. Our guard was injured and is shaken but stable. At the insistence of my amazing colleagues, we will continue operations in Ukraine today wherever possible. Their resilience is awe-inspiring and I am deeply… pic.twitter.com/NFruDdh5rI
— Scott McDonald (@McDonaldScott_) August 28, 2025
ரஷ்ய தாக்குதலில், கீவ்விலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது உக்ரைன் தலைநகரில் அமைந்துள்ள பிரித்தானிய ஆலோசனை மற்றும் கல்வி மையம் ஆகும்.
பிரிட்டிஷ் கவுன்சில் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ரஷ்யா இரத்தம் சிந்துவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
My thoughts are with all those affected by the senseless Russian strikes on Kyiv which have damaged the British Council building.
— Keir Starmer (@Keir_Starmer) August 28, 2025
Putin is killing children and civilians, and sabotaging hopes of peace.
This bloodshed must end.
கீவ் நகரம் மீதான தாக்குதலில் 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 2, 14 மற்றும் 17 வயதுள்ள சிறுபிள்ளைகளும் அடங்குவர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
உலக நாடுகளின் தலைவர்கள் பலர் உக்ரைனில் அமைதியை நிலநிறுத்த முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்பதையே இந்த தாக்குதல் காட்டுவதாக கருதப்படுகிறது.
மேலும், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு புடின் கொடுத்துள்ள எச்சரிக்கை செய்திதான் இது என்றும் கருதப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன், பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடங்களை பிரித்தானிய உளவுத்துறை மறைவிடமாக பயன்படுத்துவதாக ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்பு ஏஜன்சி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |