ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் அடுத்த திட்டம் இதுதான்: எச்சரிக்கும் முன்னணி நிபுணர்
மேற்கு நாடுகள் மீதான தாக்குதலின் அடுத்த கட்டத்தில், ஐரோப்பாவில் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பயங்கரவாத தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடலாம் என முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் பலியாக
ரஷ்ய படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் மறைமுக போரில் ஐரோப்பாவின் அப்பாவி பொதுமக்கள் பலியாக வாய்ப்புள்ளது என்றே Keir Giles என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
போலந்துக்கு எதிராக வான்வழியாக பயங்கரவாதச் செயல்களை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே Keir Giles இதன் பின்னணியை விளக்கியுள்ளார்.
பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள ஒரு கிடங்கில் பொதி ஒன்று திடீரென்உ தீப்பிடித்த சம்பவத்தை குறிப்பிட்டு போலந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டுமின்றி, ஜேர்மனி மற்றும் போலந்தில் உள்ள சரக்கு விமானங்களிலும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய உளவு அமைப்புகலும் CIA யும் இந்த திட்டத்தை ரஷ்யாவே முன்னெடுத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ரஷ்ய நாசவேலைகள்
முன்னதாக, பனிப்போர் காலகட்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத இயக்கங்களுக்கு ரஷ்யா நிதியுதவி அளித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள Keir Giles, தற்போது இந்த விமானப் பொதி திட்டங்களுடன், பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ரஷ்யாவின் சதி மீண்டும் திரும்பியுள்ளது என்றார்.
ஐரோப்பா முழுவதும் ரஷ்ய அரசு பயங்கரவாத தாக்குதல்கள் விரைவில் அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம் என்றார். ஐரோப்பாவில் ரஷ்ய நாசவேலைகள் குறித்து நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும், எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் எச்சரிக்கைகள் சரி என்பதற்கான தொடர்ச்சியான சான்றுகள் இருந்தபோதிலும், யாரும் இன்னும் அவற்றைக் கேட்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் Keir Giles தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |