வீட்டுக்காவலில் இருந்து தப்பித்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி: உக்ரைன் உளவுத்துறை அதிரடி!
உக்ரைனில் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக் சிலநாள்களுக்கு முன்பு பொலிசாரிடம் இருந்து தப்பித்த நிலையில், அவரை தற்போது உக்ரைன் உளவுத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
உக்ரைனில் இருந்து கொண்டு ரஷ்யாவிற்கு ஆதரவாக தொலைக்காட்சி நிறுவனம் நடத்திவந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக் கடந்த மே 21 திகதி உக்ரைன் வளங்களை திருடியது மற்றும் உக்ரைனிக்கு எதிராக செயல்படுவது போன்ற காரணங்களுக்காக கைதி செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது தீவிரவாதிகளுக்கு உதவியதாக கூடுதல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் மிதான குற்றங்கள் வலுப்படுத்தப்பட்டது.
⚡Ukraine's Security service has detained pro-Russian politician Victor Medvedchuk, whose daughter's godfather is Putin
— Euromaidan Press (@EuromaidanPress) April 12, 2022
SBU promises that the same fate awaits all pro-Russian figures and agents of Russian secret services in Ukraine pic.twitter.com/ulLwHJHEGr
இதனைதொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு 5 நாள்களுக்கு முன்பு அவரது மனைவி உக்ரைனை விட்டு வெளியேறி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 27ம் திகதி மெட்வெட்சுக்-கின் தனிப்பட்ட வாகனம் அவரது இடத்தை சுற்றி திரிந்ததாகவும், பின்னர் அவர் வீட்டு காவல் இருந்து தப்பிவிட்டதாகவும் உக்ரைன் காவல்துறையினர் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இந்தநிலையில், ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியும், உக்ரைன் கிளர்ச்சியாளர் பகுதிகளின் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட இருந்த ஆட்சியாளருமான விக்டர் மெட்வெட்சுக்-கை உக்ரைன் உளவுத்துறை கைது செய்யுள்ளதாக தெரிவித்துள்ளது.
Ukrainian intelligence chief Bakanov on operation to capture Putin alley Medvedchuk: “You can be pro-Russian politician and work for aggressor for years. You can evade justice. You can even wear Ukrainian military uniform. But can you evade punishment? Never! Handcuffs await you” pic.twitter.com/Dv3SEOiIv9
— Oliver Carroll (@olliecarroll) April 12, 2022
அவரது கைது குறித்து பேசியுள்ள உக்ரைன் உளவுத்துறை தலைவர் பகானோவ், நீங்கள் நீதியை தவிர்க்கலாம், உக்ரைன் ராணுவத்தின் சீருடையை கூட அணியலாம் ஆனால் உங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.