ரஷ்யா-உக்ரைன் இடையே 300 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: நன்றி தெரித்த ஜெலென்ஸ்கி!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து நீடிக்கும் போருக்கு மத்தியில் 300 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.
பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. இரு தரப்பிலும் 150 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் முழு அளவிலான போர் தொடங்கியதிலிருந்து இது மிகப்பெரிய பிணைக் கைதிகள் பரிமாற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் 150 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்த போதிலும், உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அசோவ்ஸ்டால் எஃகு ஆலை மற்றும் செர்னோபில் அணுமின் நிலையம் போன்ற முக்கிய இடங்களை பாதுகாத்த 189 உக்ரைனிய வீரர்கள் நாடு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி
இந்த பிணைக் கைதிகள் பரிமாற்றத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எளிதாக்கி உள்ளது.
உக்ரைனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிப்பதில் பங்களிப்பு செய்ததற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற கூட்டாளிகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட ரஷ்ய கைதிகள் பெலாரஸ் பிரதேசம் வழியாக ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |