போர்நிறுத்தத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்..மாறி மாறி தாக்கிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்
தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ட்ரோன் தாக்குதல் நடத்தின.
தற்காலிக போர்நிறுத்தம்
நான்கு ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் மரணங்கள் நிகழ்ந்தன.
இந்த நிலையில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே, தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதாவது வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை இரு நாடுகளும் ஒன்றையொன்று ட்ரோன் விமானங்களைக் கொண்டு தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டன.
160 ட்ரோன்கள்
இதில் குறைந்தது 160 ட்ரோன்களை உக்ரைன் மீது ரஷ்யா தாக்கியதாகவும், அந்நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடார் பகுதியில், உக்ரேனிய ட்ரோன் விமானங்களின் தாக்குதலால் ஒரு எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அடுக்குமாடிக் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |