பின்வாங்குகிறதா ரஷ்யா? ரஷ்யாவின் முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது என அறிவிப்பு
உக்ரைன் ஆயுதப்படையின் தீர்க்கமான தடுப்பு தாக்குதலால் ரஷ்யா கிழக்கு நோக்கி தனது ராணுவ படையை பின்வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரனின் கிழக்கு எல்லை பகுதிக்கான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை ரஷ்யா ஜனாதிபதி புடின் சுகந்திர பகுதிகளாக அறிவித்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரஷ்யாவின் பாதுகாப்பு படைகளை கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி வைத்தார்.
இந்த அறிவிப்பின் நீட்சியாக உக்ரைன் மீதான முழுநீள போரை கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா தொடங்கியது. தற்போது இந்த போர் நடவடிக்கையானது 31 வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்களின் தடுப்பு தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய ராணுவத்தினர் தடுமாறி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய ராணுவம் கெர்சன் நகரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக தெரிவித்தது இருந்தது.
இந்த நிலையில், ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் கிழக்கு பகுதிகளை நோக்கி பின்வாங்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது ரஷ்யா ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை சுகந்திர பகுதிகளாக மாற்றுவதில் முக்கிய கவனம் கொள்ளப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Photo by Justin Yau/ Credit: Sipa USA/Alamy Live News
இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை பேசிய ரஷ்யாவின் பொது அதிகாரிகளின் செயல்பாட்டு இயக்குநரகத்தின் தலைவர் செர்ஜி ருட்ஸ்காய்(Sergei Rudskoi), உக்ரைன் ஆயுதப்படையின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து படையெடுப்பின் முக்கிய குறிக்கோளான டான்பாஸ் பகுதியை சுகந்திர பகுதியாக மாற்றும் முதல்பகுதி நோக்கங்கள் நிறைவேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ரஷ்யாவில் இருந்து வெளியான தகவலில், உக்ரைனில் ஆயிரக்கணக்கான ரஷ்யா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பின் அளவை குறைக்கும் நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.