அணுவாயுத ஏவுகணை பயிற்சியில் புடின் படை., ரஷ்யா மறைமுக எச்சரிக்கை
உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு மத்தியில் கலினின்கிராட்டின் மேற்குப் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணைத் தாக்குதல்களை தனது படைகள் பயிற்சி செய்து வருவதாக ரஷ்யா எச்சரிக்கும் வகையில் அறிவித்துள்ளது.
உக்ரைனில் போர் தொடங்கி 70-நாள் ஆகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிக மோசமான அகதிகள் நெருக்கடி இந்த போரால் ஏற்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துவருகின்றனர். இந்த படையெடுப்பை "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று கூறுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா உட்பட மேற்கத்திய மற்றும் உக்ரைன் ஆதரவு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துவருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த விருப்பம் இருப்பதாக மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தல்களை இதன்மூலம் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களான போலந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள பால்டிக் கடலில் புதன்கிழமை நடைபெற்ற போர் பயிற்சிக்களின் போது, ரஷ்யா அணுசக்தி திறன் கொண்ட இஸ்கண்டர் மொபைல் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகளின் உருவகப்படுத்தப்பட்ட "எலக்ட்ரானிக் ஏவுகணைகளை" தாக்குதல் பயிற்சி செய்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போலியாக அமைக்கப்பட்ட ஏவுகணை அமைப்புகள், விமானநிலையங்கள், பாதுகாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, ராணுவ உபகரணங்கள் மற்றும் எதிரியின் கட்டளை நிலைகள் மீது ஒற்றை மற்றும் பல தாக்குதல்களை நடத்தி பயிற்சி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு மற்றும் இரசாயன மாசுபாட்டின் நிலைமைகளிலும் தாக்குதல் நடத்தும் வகையில் பயிற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.