சிறுபிள்ளைகளை கூட விட்டு வைக்காத ரஷ்யா: வெளியாகியுள்ள அதிரவைக்கும் புகைப்படங்கள்
போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்று விரும்பும் சிறுகுழந்தைகளைக் கூட, ரஷ்ய பொலிசார் கைது செய்து காவலில் அடைத்துள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
புடின் தனது நாடு பிடிக்கும் ஆசையால் உக்ரைனை ஊடுருவினாலும், அவரது சொந்த நாட்டிலேயே அதை எதிர்க்கும் மக்கள் இருக்கிறார்கள்.
ஏராளம் ரஷ்ய குடிமக்கள், போர் வேண்டாம் என்று கூறி சாலைகளில் இறங்கி பேரணிகளில் ஈடுபட, பொலிசார் அவர்களைக் கைது செய்து வருகிறார்கள்.
50 நகரங்களில் சுமார் 7,000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்று கூறும் பதாகைகளை ஏந்தியிருந்த சிறுபிள்ளைகள் சிலரை ரஷ்ய பொலிசார் கைது செய்து காவலில் அடைத்துள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, மூன்று பிள்ளைகள், மாஸ்கோவிலுள்ள உக்ரைன் தூதரகத்தின் முன் பூச்செண்டுகளை வைக்கச் சென்றதாகவும், அவர்களை பொலிசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
வெளியாகியுள்ள புகைப்படங்களில், அந்த மூன்று பிள்ளைகளும் பொலிஸ் வேனில் உட்கார்ந்திருப்பதைக் காணலாம்.
மற்றொரு புகைப்படத்தில், ஒரு சிறுமி, காவல் நிலையத்தில் உட்கார்ந்திருப்பதையும் காண முடிகிறது.
ரஷ்யாவில், போருக்கு எதிராக பேரணிகளில் ஈடுபடுவோர் மீது தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் சிறையிலடைக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.