வெளிநாட்டவர் ஒருவரைக் கைது செய்துள்ள ரஷ்யா: பின்னணி
Russia arrests German man, calls him a mercenary for Ukraine: ஜேர்மானியர் ஒருவரை கைது செய்துள்ள ரஷ்ய அதிகாரிகள், அவர் உக்ரைன் கூலிப்படையைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளனர்.
ரஷ்ய அதிகாரிகள், ஜேர்மானியர் ஒருவரை கைது செய்துள்ள நிலையில், கூலிப்படையாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மானியர்
ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்பு அதிகாரிகள், ஜேர்மானியர் ஒருவரைக் கைது செய்துள்ள நிலையில், அவர் ஒரு முன்னாள் ஜேர்மன் ராணுவ வீரர் என்றும் பயிற்சி பெற்ற ஸ்னைப்பர் என்றும் கூறியுள்ளனர்.

அவர், 2016 முதல் 2018 வரை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரைனில் போராடியதாக தெரிவித்துள்ள ரஷ்ய அதிகாரிகள், 2025ஆம் ஆண்டு அவர் உக்ரைனுக்கு கூலிப்படையினராக திரும்பியதாகவும், Donetsk பகுதியில் சண்டையிட்டதாகவும், சம்பளம் கொடுக்கப்படாததால் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், அவர் எப்படி ரஷ்யாவுக்கு வந்தார் என்பது குறித்தோ, எந்த சூழ்நிலையில், எங்கு வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறித்தோ ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதிலிருந்தே, உக்ரைனுக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டி வெளிநாட்டவர்கள் பலரை ரஷ்யா கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.