குழந்தைகள் மருத்துவமனை மீது குண்டு போட்ட ரஷ்யா! வீடியோ ஆதாரம்
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷய் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் Mykolaiv நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா தாக்குதல் நடத்திய வீடியோவை Mykolaiv கவர்னர் விட்டலி கிம் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் திடீரென ஒரு குண்டு விழுந்து பயங்கரமாக வெடித்துச் சிதறுகிறது.
இலங்கை நெருக்கடி தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகை லாஸ்லியா
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
The Head of the Mykolaiv regional military administration Vitaly Kim showed the video of yesterday's attack on children's hospital pic.twitter.com/Lj5130bs7m
— Hromadske Int. (@Hromadske) April 5, 2022
உக்ரைன் மீது 41வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் புச்சா நகரில் பொதுமக்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.