பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதல்: குலைநடுங்க வைக்கும் காட்சிகள்!
உக்ரைனில் ரஷ்ய போர் உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில், நேற்று ப்ரோவரி பகுதியில் உள்ள Velyka Dymerka என்ற நகர்ப்புற இடத்தின், பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 19 நாள்களை கடந்து 20நாளாக இன்றும் தொடரும் நிலையில், மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த சூழலில் போரின் தீவிரமானது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில், உக்ரைனின் தலைநகர் கீவ்வை ஒருவாரத்திற்கும் மேலாக சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ராணுவ வீரர்கள் நேற்று கீவ் மாகாணத்தின் ப்ரொவரி ரைன் (Brovary Raion) உள்ள வெலிகா டைமர்கா என்ற குடியிருப்பு பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.
In Velyka Dymerka, the occupiers shelled a bus stop where people were staying. pic.twitter.com/voTlf8jRf9
— NEXTA (@nexta_tv) March 14, 2022
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு உக்ரைன் அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்தத்தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவராத நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தை தேடித்தேடி வேட்டையாடும் உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்!