உக்ரைனின் செர்னிஹிவ் நகரை குறிவைத்த ரஷ்யா: 5 பேர் உயிரிழப்பு
Russia Attacks Chernihiv 5 Dead 26 injured: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்
உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் உள்ள ப்ரைலுக்கி நகரில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக புதன்கிழமை அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் 26 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 8 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் முக்கிய தாக்குதல் புள்ளியாக நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் இருந்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் மற்றும் ஷெஹெட்(Shahed) உட்பட 70 வான்வழி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் சில மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை குறிப்பிட்டு உக்ரைனுக்கான வான் பாதுகாப்பு தொகுப்புகள் மிகவும் அவசியமானது என்று ஜெலென்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.