உக்ரைன் தலைநகரின் ஒவ்வொரு மாவட்டமாக குறிவைத்து நொறுக்கிய ரஷ்யா: பற்றியெரியும் நெருப்பு
உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி ரஷ்யா அதிரவைத்துள்ளது.
தாக்குதல் தொடர்வதாக
குறைந்தது 11 பேர்கள் காயங்களுடன் தப்பிய இந்த தொடர் தாக்குதலை அடுத்து அவசர சேவைக் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைன் தலைநகர் மீதான தாக்குதல் தொடர்வதாகவும், மறு அறிவிப்பு வரும் வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அறைகளில் இருந்து வெளியே வரவேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.
அத்துடன் மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் முடங்கலாம் என நகர நிர்வாகம் எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், தலைநகரின் பல பகுதிகள் பற்றியெரிகிறது.
இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே இடிபாடுகள் நிறைந்த தெருக்களில் மக்கள் திரண்டுள்ளனர். ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த கீய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர்,

முடக்கப்பட வாய்ப்பு
தலைநகரின் வெப்பப்படுத்தும் அமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு மாவட்டத்தில் சேவைகள் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும், பல மாவட்டங்களில் குடிநீர் மற்றும் மின்சாரம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார்.

உயர் அணுசக்தி அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்திய ஒரு பெரிய ஊழல் வழக்கைத் தொடர்ந்து, உக்ரைன் ஊழலைத் தொடர்ந்து கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த வாரம் எச்சரித்த நிலையில், ரஷ்யா உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவின் படையெடுப்பைத் தடுக்க உக்ரைன் தொடர்ந்து போராடிவருவதால், உதவிகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |