சீண்டினால் மரண அடிதான்: ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஸ்வீடன் அல்லது பின்லாந்து விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையிட்டால் அதற்கு அவர் பெருவிலை அளிக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவுக்கு எதிராக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் என மிரட்டலும் விடுத்துள்ளது.
நேட்டோ அமைப்பு விரிவுபடுத்தப்படுவது ரஷ்யாவுக்கு ஆபத்தாக முடியும் என்றே அந்த நாடு அஞ்சுகிறது. மட்டுமின்றி, உக்ரைனுடன் மேற்கத்திய நாடுகள் நட்பு பாராட்டுவதிலும் ரஷ்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவதாலையே, ரஷ்யா அந்த நாட்டின் மீது படையெடுப்பை முன்னெடுத்தது எனவும் கூறப்படுகிறது.
ரஷ்ய எல்லையில் சூழும் போரை தவிர்க்க பிரித்தானியா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டிப்பாக தங்கள் உறுதியை வெளிப்படுத்த வேண்டும் எனவும், உக்ரைனுக்கு வெளியே படையெடுப்பை ரஷ்யா முன்னெடுத்தால் மரண அடி உறுதி என்பதையும் ரஷ்யாவுக்கு புரியவைக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் பெண் ஒருவர் பிரதமராக அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாகவே, பின்லாந்தை அதன் நீண்ட நடுநிலை வரலாற்றை விட்டுவிட்டு நேட்டோ அங்கத்துவத்தை நாடத் தூண்டியது.
இதனிடையே, ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் Sergei Ryabkov தெரிவிக்கையில், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் இந்த முடிவு மற்றொரு பெரிய தவறு எனவும், இராணுவ பதற்றத்தை இது அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.