ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: சேதமடைந்த 11ம் நூற்றாண்டு தேவாலயம்: 9 பேர் உயிரிழப்பு
உக்ரைனுக்குள் அத்துமீறி ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க டார்மிஷன் கதீட்ரல் தேவாலயம் சேதமடைந்துள்ளது.
ரஷ்யா வான்வழித் தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 23 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

மின் உள்கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக கிட்டத்தட்ட 14,000 குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
ரஷ்யா நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் வரலாற்று சிறப்புமிக்க 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த டார்மிஷன் கதீட்ரல் தேவாலயம் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது.
தேவாலயம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை உக்ரைனிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் நமது மக்களின் பாரம்பரியத்தின் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது 5 தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |