நள்ளிரவில் மாஸ்கோ நடத்திய தாக்குதல்: குறிவைக்கப்பட்ட உக்ரைனின் தளவாட மற்றும் தொழிற்சாலைகள்
Russia attacks Ukraine logistics and industries: உக்ரைன் முக்கிய தளவாட தொழிற்சாலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனை குறிவைத்து தாக்குதல்
ரஷ்யா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் அமைந்துள்ள அந்நாட்டின் ராணுவ தொழிற்சாலைகள் மற்றும் தளவாட மையங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பெரிய உலோக ஆலைகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் துறைமுக கட்டமைப்புகள் ஆகியவை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக Dnipropetrovsk மற்றும் Dnepr உலோக ஆலைகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது உக்ரைனின் முதல் உலோக தயாரிப்பு வழங்குநர் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
அதே போல், Nikolaev மற்றும் Odessa பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ உபகரணங்கள் சேமிப்பு கிடங்கு மற்றும் தளவாட மையங்கள் ஆகியவை ரஷ்ய வான்வழித் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் Svyatopetrovsky தளவாட மையமும், 2 எரிபொருள் சேமிப்பு தளங்களும் தாக்கப்பட்டுள்ளன.
Chernomorsk துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்வது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |