உக்ரைனை சுற்றி வளைத்த 154 ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த உக்ரைனிய வான்படை
உக்ரைன் வான்பரப்பில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ரஷ்ய ட்ரோன்களை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
வெள்ளிக்கிழமை உக்ரைனின் வான்பரப்பில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக உக்ரைன் விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கிட்டத்தட்ட 154 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலை துல்லியமாக நடத்துவதற்காக ரஷ்யா திசை திருப்பும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஏவிய 154 ட்ரோன்களில் 100 ஷாஹெட் ட்ரோன்கள், ஜெர்பெரா மற்றும் இடல்மாஸ் ஆகிய புதிய மாடல் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுள்ளது.
ரஷ்யா குர்ஸ்க் பகுதியில் இஸ்காண்டர்-ஏம் ஏவுகணையை ஏவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏவிய மொத்த ட்ரோன்களில் 111 ட்ரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் 18 இடங்களில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |