கருங்கடலில் அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய 2 ரஷ்ய விமானிகளுக்கு விருது: ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம்
கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ராணுவ விமானிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் விருது வழங்கி மரியாதை செலுத்தியுள்ளார்.
வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன்
விமானம் செவ்வாய் கிழமை கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது.
மேலும் MQ-9 ரீப்பர் கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ரஷ்யா தாக்கியதன் காரணமாகவே அமெரிக்க ராணுவம் அதை கருங்கடலில் வீழ்த்தி சிதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பென்டகன் தெரிவித்து இருந்தது.
#BREAKING US army published the footage from the drone incident with Russia over the Black Sea pic.twitter.com/ney41fNjGb
— Guy Elster (@guyelster) March 16, 2023
அத்துடன் வியாழக்கிழமை இந்த சம்பவத்தின் 42 வினாடி வீடியோவை வெளியிட்டு, ரஷ்ய போர் விமானம் சர்வதேச வான்வெளியில் கருங்கடலில் இடைமறித்த போது ட்ரோன் வழக்கமான பணியில் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
விமானிகளுக்கு ரஷ்யா விருது
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மத்தியில் கருங்கடலில் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோனை இடைமறித்த இரண்டு விமானிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு விருதினை வழங்கி சிறப்பித்துள்ளார்.
migflug.com
அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது விபத்தை ஏற்படுத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ள நிலையில், ரஷ்ய அமைச்சகம் வெள்ளிக்கிழமை இந்த விருதுகளை அறிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவால் விதிக்கப்பட்ட சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகளை "மீறாமல்" அமெரிக்க ட்ரோனை தடுத்ததற்காக இரண்டு Su-27 விமானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு விருதுகளை வழங்கினார் என்று தி மாஸ்கோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.