ரஷ்யாவில் பீட்சாவுக்கு தடை: புடினுடைய ரகசிய காதலி வெளியிட்டுள்ள வீடியோக்கள்
ரஷ்யாவில் மேற்கத்திய நாடுகளின் உணவுகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியகிவருகின்றன.
இந்நிலையில், அந்த கருத்தை ஆதரிக்கும் வகையில் புடினுடைய ரகசிய காதலி என அழைக்கப்படும் பெண் வீடியோக்கள் வெளியிட்டுவருகிறார்.
ரஷ்யாவில் பீட்சாவுக்கு தடை
ரஷ்யாவில் பீட்சாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக, மக்கள் பாரம்பரிய உணவுகளான pancake மற்றும் pie என்னும் உணவுகளை உண்ணவேண்டும் என்றும் புடினுடைய ரகசிய காதலி என அழைக்கப்படும் Ekaterina Mizulina என்னும் பெண் கூறிவருகிறார்.
Ekaterina Mizulina/Telegram
அதற்கு ஆதரவாக, உள்ளூர் உணவு வகைகளை உண்ணுவதைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார் Ekaterina.
அத்துடன், ரஷ்ய நாடாளுமன்ற கமிட்டியுன் உறுப்பினர்களில் ஒருவரான Alexei Govyrin என்பவரும், பாரம்பரிய ரஷ்ய உணவுகளை தயாரிப்பதற்கு பதிகாக ரஷ்ய உணவகங்கள் பீட்சாவையும் சூஷியையும் தயாரித்து வருவதாகவும், தனக்கு அது வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |