உளவு பார்க்கப்படும் அபாயம்; ரஷ்ய அதிகாரிகள் ஐபோன் பயன்படுத்த தடை
ரஷ்ய அரசு ஊழியர்கள் ஐபோன், ஐபேட் போன்ற ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை
அலுவலக பயன்பாட்டிற்கு அப்பிளின் iPhone மற்றும் iPadகளை பயன்படுத்துவத்தை தவிர்க்குமாறு ரஷ்ய அரசாங்கம் அதன் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உளவு பார்க்கப்படும் அபாயங்கள் இருப்பதன் காரணமாக ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
"பணி சார்ந்த செயலிகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றத்தை அணுக (Apple) மொபைல் சாதனங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது," என்று ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சர் Maksut Shadaev டிஜிட்டல் மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதேநேரம் "தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது," என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
ஆப்பிள் மறுப்பு
அமெரிக்காவின் உளவு நடவடிக்கையின் விளைவாக பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் சாதனங்கள் சமரசம் செய்யப்பட்டதாக ரஷ்ய முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவையான FSB கூறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமைச்சகம் இவாறான தடையை விதித்துள்ளது.
ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |