உக்ரைனியர்கள் வயிற்றில் அடிக்கும் ரஷ்யா... உணவுக்கு உலை வைத்தாயிற்று: இப்போது தண்ணீருக்கு...
உக்ரைனில் இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக உணவும் தண்ணீரும் இல்லாமல் பட்டினி போட்டு கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
சென்ற வாரம் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே கிழக்கு உக்ரைனிலுள்ள உணவு விநியோகத்தைக் குறிவைத்ததாக Luhansk அலுவலர்கள் தெரிவித்திருந்தார்கள். Sievierodonetsk நகரை ஏவுகணைகளால் சரமாரியாகத் தாக்கி, உணவு சேமிப்பகங்கள், சந்தைகள் மற்றும் கடைகளை எல்லாம் நாசப்படுத்தினார்கள் அவர்கள்.
100,000 மக்கள் வாழ்ந்த அந்நகரில் இப்போது 17,000 பேர்தான் இருக்கிறார்கள். அவர்களும் உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
இப்போது, மின் உற்பத்தி மையங்களையும் தண்ணீர்க் குழாய்களையும் குறிவைத்து அவர்கள் தாக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் Luhansk ஆளுநரான Serhiy Haidai.
போர்க்களத்தில் நியாயமாக யுத்தம் செய்பவர்கள் போல் காட்டிக்கொள்ளும் ரஷ்யா, பின்னால் இதுபோல் உணவையும் தண்ணீரையும் நாசமாக்கி மக்களைக் கொல்ல முயல்கிறது என்கிறார் அவர்.
தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், மக்கள் நீரிழப்பால் உயிரிழக்கத் தொடங்குவார்கள். ரஷ்யா செய்வதெல்லாம் போர்க்குற்றங்கள்தான், உக்ரைனியர்களை இனப்படுகொலை செய்யப்பார்க்கிறார்கள் அவர்கள் என்கிறார் அவர்.
நேற்று 7,500 இடங்களில் 24 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கும் Luhansk அதிகாரிகள், கிட்டத்தட்ட அந்தப் பகுதி முழுவதிலுமே தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால், இன்னமும் ரஷ்யா தாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றே கூறிவருவதுதான் வேடிக்கை!