அதிகரிக்கும் பதட்டங்கள் இடையே.,எதிரி தாக்குதலைத் தடுக்க ஒன்றாக களமிறங்கிய ரஷ்யா, பெலாரஸ்
ரஷ்யாவும், பெலாரஸும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டு இராணுவப் பயிற்சி
போலந்து தங்கள் வான்வெளியில் ரஷ்யா வேண்டுமென்றே ட்ரோன்களை ஏவியதாக குற்றம்சாட்டியது.
இதனால் நேட்டோவின் கிழக்குப் பகுதியில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் பெலாரஸுடன் இணைந்து ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களும் கூறும்போது, "Zapad-2025" பயிற்சிகள் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறும்.
எதிரி தாக்குதலைத் தடுக்கவும், இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றவும், அவர்கள் தங்கள் யூனியன் மாநிலம் என்று அழைக்கும் எல்லைகளைப் பாதுகாப்பதும்தான் இந்த பயிற்சிகளின் நோக்கம் ஆகும் என்றன.
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பதைத் தொடங்கியதில் இருந்து நடைபெறும் முதல் Zapad பயிற்சிகள் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |